இதய வலி போக்கும் வலி நிவாரணி
உன்னோடு சிரித்து பேசிய நாட்களும்
நீ அன்பாய் உதிர்த்த வார்த்தைகளும்
ஆசையாய் பார்த்த பார்வைகளும்
செல்லமாய் கோபித்துக்கொண்ட நிமிடங்களும்
அவ்வப்போது தீண்டிய தீண்டல்களும்
காதல் கொண்ட நாட்களும்
மொத்தமாய் யாவற்றையும் இதயத்திற்க்குள்
பத்திரமாய் சேமித்து வைத்துள்ளேன் !
என்றேனும் நீண்டதொரு பிரிவை தந்து
என்னை புறக்கணித்து சென்று விட்டாய் எனில் !
என் இதயத்தில் ஏற்படும் ஆறாத ரணங்களுக்கு
உன்னுடன் கழித்த இனிதான தருணங்கள்
இதய வலி போக்கும் வலி நிவாரணியாக இருக்கும்