பனி மலரே நெஞ்சில் குளிர் தூவு

பனி தூங்கி வெப்பம்
விழித்துக் கொள்ளும் இரவு
அந்தகாரமும் ஏகாந்தமும்
ஜல்லிக் கட்டுக் காளைகளாக மாறி
என்னைக் கொம்பு கொண்டு குத்தி நிற்கையில்
அல்லல் தீர்க்க அருகே நீ இல்லாமல்
நான் மிகவும் அவதிப்படுகின்றேன்
இமைகள் மூடி அயர நினைக்கையில்
இடை நுழைந்து இன்னும் ஏனடி
என்னை வதைக்கிறாய்
நினைவுகளை விட்டு என் நெஞ்சைத்
தனியே கவர்ந்து சென்றவளே
காற்றும் ஒரு சதி காரன்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்
உனது மல்லிகை வாசத்தை
அள்ளி வந்து என் முகத்தில்
வீசிவிட்டு அப்படியே
மறைந்து கொள்கிறான்
நான் உடைந்து போகிறேன்
என் இன்னல் தீர நீ உடன் வேண்டும்
வருவாயா வந்துவிடு காத்திருக்கிறேன்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (7-May-17, 1:46 pm)
பார்வை : 202

மேலே