அம்மாவின் சமையல்

அஞ்சறை பெட்டியிலே
அத்தனைபேரின் ஆயுளையும்
அடக்கி வைத்திருக்கும்
அம்மாவின் சமையல்..

பலாக்காய் குழம்பும்
பலாக்கொட்டை வருவலும்
நாவில் நீர் சொட்ட வைக்கும்...

மிளகு ரசமும் பருப்பு துவையலும்
அப்பப்பா...என்ன சுவை...என்ன சுவை...

பொரித்த குழம்பும்
புடலங்காய் கூட்டும்
எண்ணெய் கத்தரி குழம்பும்
சோற்று வத்தலும் அடித்துக்கொள்ள‌
ஆளே இல்லை..அம்மாவின் சமையலில்...

அம்மியில் அரைத்து வைக்கும்
மீன் குழம்பின் மணம்
திகட்டாத தேவாமிர்தம்...

பண்டிகை தினங்களில் மட்டுமே
இட்டலி..தோசை...ஆட்டுக்கல்லில்
அரைத்து பூப்போல ஊற்றிவைக்கும்
இந்த இட்டலிக்கு சில நேரங்களில்
ஆட்டுக்கால் பாயாவும்...

கம்பு சோள தோசையும்
எள்ளு துவையளும்
நாள் முழுவதும் உற்சாகம் கொடுக்கும்

காய்ச்சல் வந்தால் கஞ்சியே மருந்தாகும்
அம்மாவிடம் இருக்கும் அஞ்சறைப்பெட்டியில்
அன்பு மட்டுமே நிறைந்திருக்கும் ..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (8-May-17, 4:06 pm)
Tanglish : ammaavin samayal
பார்வை : 163

மேலே