தாயின் மறுபக்கம்

குங்குமம் சூட
குன்றாய் பிறந்தாய் ...
குலவிளக்கில்
ஒளியாய் மிளிர்ந்தாய் ...
மஞ்சள் பேண
மணமாய் புகுந்தாய் ...
மனையின் பெருமைக்கு
மகுடமாய் நின்றாய் ...

சுகதுக்கங்களில்
சுமைதாங்கியாய் வந்தாய் ...
நிறை குறைகளில்
நிரந்து நின்றாய் ..
பிள்ளை பெற்றோர்களை
பேணி காத்தாய் ...
உண்டு உழைத்திட
உவகை புரிந்தாய் ...

தாலிக்குள் உன்
தலைவனை புகழ்ந்தாய் ...
தாய்க்கு நிகராய்
மறுதாயாய் மலர்ந்தாய் ...
என் தாயே போற்றிட
மாற்று மகளாய் திகழ்ந்தாய் ...

கண்ணுறக்கம் இல்லாது -
கை கால்கள் மாயாது -
நேரத்தில் பசி ஆறாது -
நெஞ்சத்தில் பணி ஓயாது - உன்
கடமை சொல்லிட - இந்த
கவிகள் என்றும் அடங்காது ...

மனையாளே ! - உனை போற்றாவிடில்
மானுடன் என்றும்
மடையனே !!!

நீ என்றும்
என்னில் ஒருபக்கம் -
என் தாயின் மறுபக்கம் ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (8-May-17, 8:55 pm)
பார்வை : 148

மேலே