புயலின் வேகம்

கவுசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சுப்ரபாதம் டிவியில் பாட நர்மதா வேகமாக அலுவலகம் செல்ல வேலைகளை முடித்தாள். அம்மா நான் சமையலை முடித்து டேபிளில் வைச்சிருக்கேன், நீ மறக்காம சாப்புட்டு மாத்திரை போடு.
வேகமாக பேருந்து நிறுத்தம் சென்றாள். நிறைமாத கர்ப்பிணி போல் பேருந்து வந்தது, வேறு வழி இல்லாமல் ஏறி அலுவலகம் சென்றாள். நர்மதா ஏன் லேட்டு, அந்த சிடுமூஞ்சி இராவணன் வந்த உடனே உன்னைத்தான் கேட்டான் சீக்கிரம் செல்.
சரி சாரு நான் பாத்துக்குறேன். கூட்மோர்னிங் சார். ஏம்மா லேட்டு இன்னைக்கு மீட்டிங் தெரியாதா? நம் முதலாளி இன்னைக்குத்தான் புதுசா இன்ச்சார்ஜ் எடுக்குறாரு முதல் நாளே லேட்டா வரலாமா. சீக்கிரம் வந்து குறிப்புக்கள் எல்லாம் எடுத்து ரெடியா வை. ஓகே சார்.
இராவணன் சார், முதலாளி உங்களை கூப்பிடுறாரு அட்டன்டெர் சகாயம் சொன்னான். அம்மா நர்மதா வாம்மா போலாம்.
கிரிதர் என்ற பலகை நர்மதாவை வரவேற்றது. பெயரை பார்த்தவுடன் குழப்பம் கொண்டாள். உள்ளே கிரி அவளை பார்த்து குறிப்பு புத்தகம் இருக்கா நான் சொல்பவைகளை குறிப்பு எடு முகம் பார்க்காமல் சொன்னான் ஆனால் அவளுக்குத்தான் பழைய நினைவு தலை தூக்கிற்று. யார் முன்னால் நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைத்தேனோ அவனிடமே தான் வேலை செய்வதை நினைத்து கூனி குறுகி நின்றாள் நர்மதா.
எனன அப்படியே ஓடிப்போக ஆசையா. நான் விடுவதாக இல்லை, கிரி சொன்னான். என்னையும் என் அம்மாவையும் செங்கல்பட்டு ஊரில் இருந்து பொய்யான திருட்டு பட்டம் போட்டு விரட்டினாலும் நான் துடித்தெழுந்து உன்னை வெல்வேன் இன்னும் சில நாள்களில். அதையும் பார்ப்போம் நானா நீயா என்று.
சில நாள்களில், கோர்ட்டில் கேஸ் இருக்கு சார் போலாமா என்று இராவணன் கிரியிடம் சொன்னான். நான் ரெடி சார். எதிர் தரப்பு வக்கீல் யார் சார், யாரோ லேடினு சொன்னாங்க. ஆமா சார் தெரியல நானும் இன்னும் பார்க்கலை போனாதான் தெரியும். ஓகே.
அங்கே, நர்மதா உங்கள் தரப்பு வாதத்தை என்றுநடுவர் சொல்லவும், கிரியின் மூச்சு நின்று போச்சு. ஜெயித்தது யார் என்பது இப்பொழுதே தெரிந்தது, நர்மதா தான் என்று. அவளின் புயல் போன்ற வேகத்தை அவன் அறியவில்லை அறிந்தவுடன் மன்னிப்பு கேட்டு அவளை மணக்க கேட்டான். அவளின் மனதை அறிய காத்து நின்றான்.