பசி

என்
சித்திரங்கள் இன்னும்
சீர்பெறவில்லை- என்
எண்ணங்கள் முழுமை
பெறவில்லை-என்
வரிகளுக்கு முற்றுப்புள்ளி
இல்லை - என்
தவிப்புகள் இன்னும்
தணிந்து விடவில்லை..
நல்லது தான்... ?!
இல்லையேல் நானும்
உறங்கிப் போயிருப்பேன்
பசி தீர்ந்த பிள்ளையைப் போல..