உரிமையும் உண்மையும் இல்லா காதலே - சகி

எனது காதலே .....

என் மீது நீ கொண்ட காதலை
நிஜத்தில் நம்பினேன்......

உன்னிடம் உரிமையுடன்
ஊடல் கொண்ட நிமிடங்கள்
உண்மைதானோ?

உரிமையில்லை உன்னிடம்
எனக்கு என்றும் என உணர்ந்து
விலகிச் செல்கின்றேன்.....

வலிகளை சுமக்கும்
என்னிதயத்தில் நீ தரும்
காயங்கள் என்னில்
ஆறாத காயங்கள்......

இனி என்றும்
உன்னிடம் உரிமை
கொண்டாடப்போவதில்லை......

விலகிய நானும்
எனது காதலும்
இனி விலகியே
வாழ்வோம்......

எழுதியவர் : சகி (10-May-17, 5:33 pm)
பார்வை : 964

மேலே