வலிகளோடு காத்திருக்கும் இரு விழிகள் 555

ப்ரியமானவளே...
உன் வருகைக்காக
என் வலிகளை மறந்து...
திறந்த விழிகளோடு
காத்திருக்கிறேன்...
என் வாழ்க்கையோ
அழித்துக்கொண்டு இருக்கிறது...
நாட்களோ வேகமாக
ஓடுகிறது...
என் விழிகளில் தென்றல் மோதி
நீர் துளி வந்தால் துடிப்பவள்...
இன்று உன் பிரிவில் வரும்
கண்ணீர்துளியை நீ அறிவாயா...
காத்திருக்கும் வலியும்
சுகமாக நகருதடி...
உன் நினைவுகள் என்னை
தழுவும்போதெல்லாம்...
தென்றலாக வந்து புயலாக
சென்றுவிட்டாய்...
புயலாக வந்து தென்றலாக
என்னுடன் இருப்பாயா...
காத்திருக்கிறேன் நான்
உன்னை நினைத்து.....