அருகாமை போதும்

பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் இசை : யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படம் : கற்றது தமிழ்

வரிகள் :
உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடுவானம் போலவே
கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்

இந்த புல் பூண்டும் பறவை யாவும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?

வரிகளைப்பற்றிய கவிதை :
தனிமை துயரில் தத்தளிக்கும் என் காதலனே
உன் கைப்பற்றி நான் கடக்கும் சாலைகள்
கல்லோ மண்ணோ கவலையில்லை!

தங்கம் வேண்டாம் வைரமும் வேண்டாம்
உன் துயரினை போக்கும் வரம் மட்டும் போதும்!

உன் வாடிய முகத்தையும் களங்கிய கண்களையும் காணாத
இரவொன்றை விரைவில் நான் உருவாக்குவேன்!

அவ்விரவில் உன் புன்னகையால் நிலவுக்கு ஒளியூட்டுவோம்!
நிஜத்திலும் கனவிலும் நிற்காத பயணங்களை தொடருவோம்!

என் தற்போதைய மௌனம் முற்றுப்புள்ளி அல்ல! உன்னுடன்
வாழப்போகும் வாழ்க்கையை எண்ணிப்பார்க்கும் என் முன்னோட்டமே!

கலங்காதிரு கணவனே என் மடியில் துயில் கொள்ளும் நேரம் தூரமில்லை!
உன் தோளில் நான் சாய்ந்து எதிர்காலம் பேசி, இசை கேட்டு,
பாடல்கள் பாடி, செல்ல சண்டைகள் போடும் காலம் கனிந்துகொண்டிருக்கிறது!

சுவைக்க நீ! கொடுக்க நான்! போதும்! அது போதும்!

எழுதியவர் : (11-May-17, 11:43 pm)
சேர்த்தது : ரங்கராஜ்
Tanglish : arugaamai pothum
பார்வை : 289

மேலே