ரங்கராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரங்கராஜ் |
இடம் | : சமத்தூர் |
பிறந்த தேதி | : 20-Feb-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 141 |
புள்ளி | : 7 |
நானும் தனிமையும் கற்பனையின் நட்பு வட்டாரத்துக்குள் நுழையும் முயற்சியில் !
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் இசை : யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படம் : கற்றது தமிழ்
வரிகள் :
உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடுவானம் போலவே
கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்
இந்த புல் பூண்டும் பறவை யாவும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?
வரிகளைப்பற்றிய கவிதை :
தனிமை துயரில் தத்தளிக்கும் என் காதலனே
உன் கைப்பற்றி நான் கடக்கும் சாலைகள்
கல்லோ மண்ணோ கவலையில்லை!
தங்கம் வேண்டாம் வைரமும் வேண்டாம்
உன் துயரினை போக்கும் வரம் மட்டும் போதும்!
உன் வாடிய முகத்தையும் களங்கிய கண்களையும் காணாத
இரவொன்றை விரைவில் நான்
நான் என்ன புதுமைப்பெண்ணையா காதலித்தேன் !
பூவினும் மென்மையானவளை காதலித்தேன் !
அறிவுடையவளையா விரும்பினேன் !
அமைதியானவளை விரும்பினேன் !
சம உரிமையைப்பற்றியா யோசித்தேன் !
அவள் சமயலைப்பற்றியல்லவா யோசித்தேன் !
மழை தரும் மேகத்தையா எதிர்பார்த்தேன் !
வெண் மேகத்தைத்தானே எதிர்பார்த்தேன் !
வெண் மேகமும் என் கை சேர்ந்தது !
நீல வானில் மிதந்தோம் !
தரை இறங்கவேண்டிய நேரம் வந்தது !
காவிரியுடன் கங்கை சங்கமித்தால் இமயத்தின் புகழ் வறண்டுபோகுமாம் !
சொன்னது அவளின் பிறப்பிடம் !
கங்கையும் கண்ணீருடன் தடம் மாறியது !
வேறு என்ன செய்வாள் பாவம் !
நான் என்ன புதுமைப்பெண்ணையா காதலித்தேன் !
பூவினும் மென்மை
அவளுக்குள் தான் எத்தனை பரிமாணங்கள் !
முதல் வருடத்தில் தோழியாய் இருந்தவள்
மூன்றாம் வருடத்தில் காதலியானாள் !
பின் என்னோடு பாதியாகி! என் மனைவியானாள் !
நான் கண்டிக்கும்போது என் மகளானாள் !
என் தோல்வியை மறக்க ஆறுதல் சொன்ன போது என் தந்தையானாள் !
என் துன்பம் போக்க தன் மடியில் கிடத்தி
என் முடியை வருடும்போது என் தாயுமானாள் !
நான் ஆரம்பித்த இந்த வரிகளை, அவள் முடிக்கும் போது நானுமாகி ! என் முன்னால் நாணுகிறாள் !
அவளுக்குள் தான் எத்தனை பரிமாணங்கள் !
முதல் வருடத்தில் தோழியாய் இருந்தவள்
மூன்றாம் வருடத்தில் காதலியானாள் !
பின் என்னோடு பாதியாகி! என் மனைவியானாள் !
நான் கண்டிக்கும்போது என் மகளானாள் !
என் தோல்வியை மறக்க ஆறுதல் சொன்ன போது என் தந்தையானாள் !
என் துன்பம் போக்க தன் மடியில் கிடத்தி
என் முடியை வருடும்போது என் தாயுமானாள் !
நான் ஆரம்பித்த இந்த வரிகளை, அவள் முடிக்கும் போது நானுமாகி ! என் முன்னால் நாணுகிறாள் !