மாதா பிதா மனைவி தெய்வம்

அவளுக்குள் தான் எத்தனை பரிமாணங்கள் !
முதல் வருடத்தில் தோழியாய் இருந்தவள்
மூன்றாம் வருடத்தில் காதலியானாள் !
பின் என்னோடு பாதியாகி! என் மனைவியானாள் !
நான் கண்டிக்கும்போது என் மகளானாள் !
என் தோல்வியை மறக்க ஆறுதல் சொன்ன போது என் தந்தையானாள் !
என் துன்பம் போக்க தன் மடியில் கிடத்தி
என் முடியை வருடும்போது என் தாயுமானாள் !
நான் ஆரம்பித்த இந்த வரிகளை, அவள் முடிக்கும் போது நானுமாகி ! என் முன்னால் நாணுகிறாள் !

எழுதியவர் : ச.ரங்கராஜ் (23-Mar-14, 6:10 pm)
பார்வை : 202

மேலே