நிலவிடம் கேட்பது
நிலவைக் கண்டதும் சுடசுடப் பாடி உடனே பதிந்தது !
நிலவே உன்னிடம் நானிது கேட்பேன்
நிச்சயம் செய்திட வேண்டும் - என்றன்
நினைவினில் எல்லாம் தங்கிடும் அவளை
நீசென்று கண்டிட வேண்டும் !
உலகினில் அவள்போல் அழகியில் லையென
உளறிடும் கவிஞனும் இல்லை ! - மன
உணர்வினுக் கவள்போல் உயர்ந்தவ ளிலையென
உண்மையில் சொல்லிடும் கிள்ளை ! - நான்
உண்மையில் சொல்லிடும் கிள்ளை
கலக்குறும் போது கவிதையின் வடிவில்
கண்களி லேயொளி கொடுப்பாள் - நெஞ்சில்
கனன்றிடும் தீயாய்க் கடந்திடுங் காற்றாய்
காலமெல் லாமவள் இருப்பாள் ! - என்றன்
காலமெல் லாமவள் இருப்பாள் !
மலரென நெஞ்சில் மகிழ்வுடன் பூப்பாள்
மதியினி லேவிசை சேர்ப்பாள் - காதல்
மங்கையைக் கண்டால் மருண்டிடும் என்னை
மாலையில் நினைத்திடச் சொல்வாய் ! - என்னை
மதியினில் சேர்த்திடச் சொல்வாய் !
-விவேக்பாரதி