இதயத்தில் நுழைந்தேனா

சொல்லிடச் சொல்லிட இனிக்கும் –அந்த
சுகத்தினில் எல்லாமும் கிடைக்கும்
மெல்லிடை தன்னையும் அணைக்கும்- ஒரு
மோகமே சூழ்ந்திங்கு பிணைக்கும்.

கண்ணோடு கண்ணங்கு பேசிடும் –அதன்
காதலால் பெண்ணங்கு கூசிடும்
பண்போடு பாசத்தைக் காட்டிடும் – ஒரு
பரிவோடு உறவினைக் கூட்டிடும்.

இன்பத்தேன் என்றிங்கும் பொழியும் –அதன்
இனிமையில் பெண்மையும் நெழியும்
துன்பங்கள் எல்லாமும் அழியும் –தினம்
தெவிட்டாத சுகமது வழியும்.

பூவுக்குள் தேனாக இருப்பாள் –பல
புதுமைகள் எனக்கென்றும் தருவாள்
பாவுக்குள் சுவைபோல் இனிப்பாள் –தன்
பருவத்தால் என்றுமே கனியாள்.

நினைத்தாலே உள்ளமே தித்திக்கும் –என்
நினைவின்றி உணர்வுகள் முந்திக்கும்
அவளைதான் தூக்கத்தில் சந்திக்கும்- வரும்
உறவுக்காய் என்றுமே சிந்திக்கும்.

கண்கள் இரண்டும் மீனாம் –அவள்
கன்னங்கள் மாம்பழக் கனியாம்
தொட்டால் சிலிர்க்கும் பனியாம் –குளிர்
விட்டால் சுவைதரும் தேனாம்.


உயிரோடு உயிராய் கலப்பாள் –என்
உணர்வோடு என்றுமே நிலைப்பாள்
கண்வழி இதயத்துள் புகுந்தாள்- நல்
காதலை அங்கேயே வகுத்தாள்.

என்இதயம் புகுந்து விட்டாய் – நான்
ஏதேதோ பிதற்று கின்றேன்..
உன்இதயத்தில் நுழைந் தேனா-நீ
என்றெனக்குக் கூறிடுவாய் பெண்ணே!?

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (12-May-17, 8:37 pm)
பார்வை : 271

மேலே