காதல்

உந்தன் கள்ளச் சிரிப்பும்
கள்ள விழிப் பார்வையும்
வலது கால் பெருவிரல் கொண்டு
நீ மண்ணில் வரையும் கோலமும்
நான் உன்னை பார்க்கையிலே
நீ பாராமுகமாய் இருப்பதும்
காட்டிக்கொடுக்கதடி நீ
என் மீது காதல் கொண்டுள்ளாய் என்பதை
கண்ணே இனி தாமதம் ஏன்
என் காதலை ஏற்றுக் கொள்ள
வாராய் பைங்கிளியே என்னருகே
நம் காதலுக்கு அர்த்தம் சொல்ல
பற்றிடுவாய் என் கைகள் இரண்டை
ஆடிப் பாடிடுவோம்
ஆனந்த கூத்தாடிடுவோம்
தென்றல் தெம்மாங் கிசைப்பாட
இந்த காமன் தந்த உறவை
காவியமாக்கிடுவோம் காதல் காவியமாய்
கண்கள் தந்த உறவு
உள்ளங்களை உறவால் பிணைக்க
நாம் காதலர் ஆகிவிட்டோம் அப்போதே
நம் பார்வைகள் சந்தித்தபோதே
வாராய் தங்க ரதமே
வசந்தம் தந்த உறவில்
இன்பம் காண்போம்
இனிமைக் காண்போம்
இனிதே வாழ்வோம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-May-17, 5:12 pm)
Tanglish : kaadhal
பார்வை : 127

மேலே