என் உயிர் அண்ணன்

தந்தைக்கு பிறகு நான் நேசித்த முதல் ஆண் நீ
தாய்க்கு அடுத்து நீ நேசித்த முதல் பெண் நான்
மதி தாங்கும் இரவை நீ இருந்து
ஒளிதாங்கும நிலவாய் என்னை வளர்த்தாய்
என் இமைகள் சிணுங்கும் நொடிகளில் தமையன் ஆனாய்
என் இதழ்கள் சிரிக்கும் நொடிகளில் தோழன் ஆனாய்
என் இதயம் சிதறி போகும் நொடிகளில் தந்தையாய் மறுப்பவன் நீ
புராணங்கள் கூறும் மறு பிறவி நிஜம் ஆகா வேண்டும்
அங்கும் நான் பெண்ணாகவே பிறவி கொள்ள வேண்டும்
உன் கைகோர்க்கும் தங்கையாய் அல்ல
உன் மடிதவழும் மகழாய் ...........

எழுதியவர் : ஐஸ்வர்யா ராஜகோபால் (13-May-17, 7:50 pm)
Tanglish : en uyir annan
பார்வை : 616

மேலே