மீண்டும் ஒருமுறைஅம்மா

கடல் தாண்டி சுகமாக  வாழ்ந்தாலும் -அம்மா 
உன் தோள் மீது சாய்ந்து அடைந்த சுகம் மீண்டும் ஒருமுறை கிடைக்குமா
என்று என் மனம் தினம் அலைபாயுதே உன்னை தேடி 

உன் வாழ்வை தியாகம் செய்து கனவுகளை உள் மனதில் புதைத்து 
ஆயிரம் வலிகளை உன்னில் சுமந்து   
நாங்கள் வெறுப்பை காட்டினாலும் 
வெறுப்பே காட்டி விடாமல் மனம் விரும்பி 
எங்கள் கனவுகள் மீது நீ காதல் கொண்டு  
எங்கள் வாழ்வுக்காக  உன் தூக்கத்தை தூர விலக்கி வைத்து


 காத்திருந்த தருணங்களை நினைத்து பார்க்கும் போது
அம்மா உன் பாச அலைகள் 
எங்கள் ஆயிரம் வலிகளையும் இல்லாமல் செய்து விட்டு விடும்

 மீண்டும் ஒரு முறை வந்து என்னை சுமப்பாயா அம்மா ?
நானும் உன் மடியில் துக்கங்களை மறந்து சுகம் அடைய வேண்டும் என்று
ஆவல் வந்து மோதுகிறதே .....அம்மா 

உன் பெருமையை எல்லாம் வார்த்தையால் சொல்லிவிடத்தான் நினைக்கையில்
வார்த்தைகளும் கண்களை 
ஈராமாக்கி போகுறதே..

எழுதியவர் : கலையடி அகிலன் (14-May-17, 10:09 am)
பார்வை : 327

மேலே