அன்னையர் தினம் - 140517
அன்னையர் தினம்
(14.5.17)
அம்மா
அம்மா என்பவள்
அற்புதப் பறவி
அதிசயப் பிறவி
அளவின்
அர்த்தம்
அறியாத பிறவி
அன்பை
அதிகமாய்
அள்ளித் தருபவள்
அன்றாடம் நம்மை
அரவணைத்து செல்பவள்
அடிப்பது போல்
அபிநயம் செய்வாள்
அதற்கு நாமும்
அஞ்ச வேண்டும்
அந்த அம்புலியை
அருகில்
அழைத்து
அறுசுவையுடனே
அன்னத்தை
அழகாய் ஊட்டி விடுவாள்
அதற்கு ஈடுயினை
அகிலத்தில் இல்லை
அன்னிய மக்கள் நம்மை
அவதூறு பேசினால்
அசுர வேகத்துடன்
அடைக்கலம் கொடுப்பவள்
அம்மா இருக்கிறாள்
அனாதை நாம் இல்லை
அதனாலே
அனாதை இல்லத்திற்கு
அவளை
அனுப்பாதீர்
அப்படி மீறி அனுப்பினால்
அனாதை நாம் தான்
அதனை மறவாதீர்
அன்னையர் தின வாழத்துக்கள்
தேதி - 14.5.17 நேரம் - காலை 8.50 மணி