நிகரிலா அழகு

நெருங்கினால் வீசும்
வியர்வைவாசம்!

கருங்கூந்தலில் தங்கும்
எண்ணெய் முடைநாற்றம்!

கருத்த தோலில்
சுருக்கமும் உண்டு!

இருந்தும் என்ன
இருந்தால் சொல்வீர்!

பேரழகிகள்
யாரேனும் உளரோ?

என்
உறுபசி களைய
கருங்கல் சுமக்கும்
என் தாய் போல் அழகு!

எழுதியவர் : (14-May-17, 11:46 am)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 204

மேலே