i love you AMMA

வலியோடு பெற்றெடுத்தாய்
விழி போல காத்தாய் !

பாசம் ஊட்டி வளர்த்தாய் !
பத்திரமாய் காத்தாய் !

சித்திரம்போல் படைத்தாய் !
சிந்தைக்கு அறிவூட்டி வளர்த்தாய் !

சிப்பி போல இருந்தாய்
"முத்தை " வெளியே கொணர்ந்தாய் !

உறக்கமெல்லாம் துறந்தாய் ! நான்
உறங்கும் அழகு பார்த்து ரசித்தாய் !

வீரத்தை முலைப்பாலோடு சேர்த்துதான்
ஊட்டி வளர்த்தாய் !

நிற்க சொல்லிக்கொடுத்தாய் !
நிமிர்ந்து நடக்க கற்றுக்கொடுத்தாய் !

மூத்த மகன் என்" முத்து " கடைசிவரை
என்ன காப்பாத்த போற என் சொத்துனு
ஊரெல்லாம் சொல்லி அழகு பார்த்தாய் !

எனக்கு பிடிச்ச கருப்பட்டி பணியாரம்
அடிக்கடி செஞ்சு எனக்கு ஊட்டி ,நான் பசியாற
நீ பட்டினிகிடந்தாய் !

ஊரெல்லாம் "கருவா பய ,கருப்பட்டி னு"
பட்டப்பெயர் வச்சாலும் நீ "கருப்புவைரம்" னு
கூப்பிட்டு என்னை சிரிக்க வைத்தாய்

ஒரே ஒரு சேலை எடுத்து கொடுத்ததுக்கு
ஊரெல்லாம் பெருமை பேசி வந்தாய் !

"பாண்டி" கோயிலுக்கு கூட்டிப்போயி
பாண்டி அய்யா உன்பேர் வச்சு இருக்கேன்
பத்திரமா என் புள்ளைய பாத்துக்கன்னு
இன்னமும் தான் வேண்டிக்கிட்டு வார தாயி !

உன்ன என் உசுரு உள்ள வரைக்கும்
என் உசுர போல நல்லா பாத்துக்கிருவேன்
என் அருமை தாயி !


என் அன்பு அம்மா !


i love you "AMMA "

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (14-May-17, 11:49 am)
பார்வை : 631

மேலே