என் தாய்
என் முதல் அழுகையில் மட்டுமே மகிழ்ந்தவள்
--கனியாக எனை ஈன்ற பூவே அவள்
கண்டிப்பும் கனிவும் கலந்த கண்ணகியே
--என்னை கண்ணியவனாக வளர்த்தெடுத்த ஆசிரியையே
உலகமே என்னை எதிர்க்கும் சூழ்நிலையுளே
--என் பக்கம் நிற்கும் அன்பு தேவதைஅவளே
என்னை புகழ்ந்து பேசியே பழக்க பட்டவளும்
--நான் உலக புகழ் பெறநினைப்பவளும்
தியாகாதிருவுருவமாகவும்
பொறுமையின்சிகரமாகவும்
எங்கள் வீட்டின் மஹாலட்சுமியாகவும் ---திகழும்
என் அன்னை லெட்சுமி.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
