உண்மையன்பு உணர்வறியும்

நல்ல உணர்வுக்கு மதிப்பிருக்கா? என்று பார்க்க ஒரு கவிதை எழுதி கொடுத்தேன் உரியவரிடம்...
அக்கவிதைக்குரிய இடம் குப்பைத் தொட்டியாய் அமைய,
சுற்றமென்னை இழிந்துரைக்க, திருத்திக் கொண்டேன் தனிப்பட்ட ஒருவருக்காக இனி யேதும் எழுதுவதில்லை என்று...

நட்புடன் நான் எழுதிய அந்தக் கவிதை குப்பையாக மதிக்கப்பட்டது மனமுணர இயலாமையால்...

உலகில் நண்பர்களின் நிலைப்பின்மைக்குக் காரணமே இந்த மன உணர்வுகளை புரிந்து கொள்ளாமை தான்...

செல்ல மகனே என்று
தாலாட்டி வளர்த்த தாய்,
என் தம்பிக்குப் போகத் தான் எனக்கு என்று எல்லாவற்றையும் இந்த தம்பிக்கு வழங்கிய அக்கா,
உயிர் வாழ்வதே உனக்காகத் தான்டா என்று உரைக்கும் தந்தை,
முதலியோரின் அன்புடை உணர்வை புரியாது ஊதாரியாய் வாழ்ந்தால் நான் பிறந்ததிலேயே அர்த்தமில்லை...

எங்கும் பரவட்டும் பேரன்பு...
இல்லையேல் ஏது மனிதர்களின் மாண்பு?
அன்பே உன்னை ஆளும் சக்தியென நீ நம்பு..
உன் வாழ்க்கையை வாழ்வதற்கு கிடைத்துவிடும் தெம்பு...
என்றும் உன்னை நிறைந்திருக்கட்டும் மனிதப்பண்பு...
அதனால் நீ பிறருடன் வைத்துக் கொள்ளமாட்டாய் வம்பு...
இதுவே வாழ்வில் நீ கடைப்பிடிக்கும் மகத்தான நோன்பு...
அதற்குக் காரணமாய் அமைகிறது உண்மையன்பு...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-May-17, 12:30 pm)
பார்வை : 1368

மேலே