பூக்களும் அவளும் --முஹம்மத் ஸர்பான்

ஆயிரம்
ரோஜா
இதழ்கள்
குவிந்த
அவளது
முத்தம்
சத்தம்
இன்றி
லட்சம்
கவிதை
எழுதும்

கமலப்
பூவினுள்
அவளது
கன்னம்
அல்லிப்
பூவினுள்
அவளது
தேகம்
ஓக்கிட்
பூவினுள்
அவளது
நாணம்
கடவுள்
அருளிய
அழகின்
புதுமை
கன்னிப்
பதுமை

உந்தன்
தேகம்
பூசிய
மஞ்சள்
மீதம்
மல்லிப்
பூக்கள்
கூட்டம்
பருகும்
தீர்த்தம்

எதற்காக
இந்தப்
பார்வை
உலகில்
உள்ள
கவிஞர்கள்
உன்னை
எழுத
போதாதா?
பூக்களின்
ஐ நிலம்
நீ தானே!

உந்தன்
சிவந்த
இதழின்
மலரை
களவாடி
இரவில்
ராந்தல்
மின்மினி
போன்று
எரிகிறது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (15-May-17, 5:01 pm)
பார்வை : 334

மேலே