காவலர்கள் நம் பாதுகாவலர்கள் - மன்சூர்

நின்றேன் நான் நின்றேன்!
மலையாக நான் நின்றேன்!
நின்றேன் நான் நின்றேன்!
சிலையாக நான் நின்றேன்!
மூழ்கினேன் நான் மூழ்கினேன்!
வியர்வையில் நான் மூழ்கினேன்!
பசியிலே நான் வாடினேன்!
கால் வலியில் நான் நோகினேன்!
நான்தான் உங்கள் சேவகன்!
நான்தான் மக்கள் காவலன்!
விட்டு செல்ல முடியாது!
போக மனமும் கிடையாது!
ஆணியில் மாட்டிய சட்டை போல்
காக்கி சட்டையை நான் மாட்டிக்கொண்டேன்!
உயிரும் உள்ளமும் உள்ள வரை
உறுதியாக நானிருப்பேன்!
கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
சட்டத்தின் படியே நானிருப்பேன்!
நான்தான் உங்கள் சேவகன்!
நான்தான் மக்கள் காவலன்!
நான்தான் உங்கள் சேவகன்!
நான்தான் மக்கள் காவலன்!
- மன்சூர்
(பிடித்திருந்தால் பகிரவும்)