நல்வாழ்க்கை
வாழ்க்கை என்பது தானாய் அமையும் என்கிறது மூடத்தனம்...
உன் வாழ்க்கை உன் கையில் என்பது அதிபுத்திசாலித்தனம்...
உனது மனமும், உடலும் நல்வாழ்வை அமைக்க உனது மூலதனம்...
இதை அறியாது செய்யாதே மடத்தனம்...
கடவுளிருந்தால் உலகில் மக்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? ஆதலால் கடவுள் இல்லை என்று கடவுள் மறுக்கும் கூட்டத்திற்கு எனது பதில்,
ஆம் கடவுள் இல்லை. மக்களுடைய மனதாகிய கோவிலில் அன்பாகிய கடவுள் அறவே இல்லை.
அதனால் விளைபவையே இவ்வுலகில் காணப்படும் துன்பங்களெல்லாம்...
சிந்தித்து பார் மானிடா...
அநாதைக் குழந்தை உருவாக்கப்படுகிறார்கள் அன்பில்லா, ஒழுக்கமில்லா மனிதர்களாலே...
தான் பெற்ற பிள்ளையை குப்பைத் தொட்டியில் வீசியும்,
கருக்கலைப்பு செய்தும் அன்பில்லா மிருகமாய் காமம் தேடி அலையும் மனித உருவங்களாலேயே
விளைகின்றன துன்பங்கள்...
இப்படி எண்ணற்ற துன்பங்கள் யாவும் விளையக் காரணமே அன்பில்லா மனிதன் தான்...
தட்டிக் கேட்க யாரும் இல்லையென்ற கருத்தில் தன் நல்வாழ்வைத் தொலைத்து நல்வாழ்க்கை அமையவில்லை என்று அலட்டிக் கொள்வதெல்லாம் வடிகட்டிய முட்டாள்தனம் என்பதே....