முடிவல்ல இது

தமிழினத்தின் முடிவல்ல
முள்ளிவாய்க்கால்.....
நம்
இனத்தின்
வெற்றிக்கான
முதல் புள்ளி.....!!

நினைவை
விட்டகலாத
உயிரின்
ஓலங்கள்.....
இன்னும்
செவிகளில்....
மறக்கவும்
மன்னிக்கவும்
மனதில்
இடமில்லை.....!!

இந்த
நூற்றாண்டின்
மிகக்
கொடிய.....
மனிதப்
படுகொலை.....
உலகமெல்லாம்
சொல்கிறது.....ஆனாலும்
உண்மையையும்
நீதியையும்
மறந்துவிட்டு......
மறுத்துப்
போகிறது......
மரத்துப்போனது
மனிதநேயம்......!!?

அழுகுரலின்
ஓலங்கள்
விண்ணைத்தொட்டு
மண்ணில்
விழுந்தது....
எடுத்துச்
செல்ல..... யாருமின்றி
வீழ்ந்த
இடத்திலேயே
வித்துடல்
ஆனது......!!

காடையர்
கூட்டம்
ஆடை அவிழ்த்துப்
பார்த்தது.....
பிணமென்று
புரிந்தும்
புணர்ந்து
புன்சிரிப்போடு
புகைப்படம்
போடுறான்.....!!!

அரசமரத்துப்
புத்தனின்
போதனைகள்
மறந்து
இளம் குஞ்சுகளை
வேட்டையாடும்
பருந்துகள்
போல.....
பகைவர்
கூட்டம்......
போட்ட
ஆட்டங்களை
ஒரு நாடும்
கேட்டதில்லை......!!!!

தொலைந்த
உறவுகளைத்
தேடி....
இன்றும்
தொலைகிற
உடன்பிறப்புக்களை
யாரறிவார்....?

மாண்டவர்
துயரங்களை
மனிதர்கள்
அறிவார்கள்....
மனிதர்களை
ஆட்டிப்படைக்கும்
அரசியல்
அறிவிலிகள்
அறியார்.....!!

முடிவல்ல
முள்ளிவாய்க்கால்......
நாம்
முடிவு
எடுத்த..... முதல்
நாள்.....!!

எழுதியவர் : thampu (15-May-17, 10:58 pm)
சேர்த்தது : தம்பு
Tanglish : mutivalla ithu
பார்வை : 266

மேலே