சொர்க்கக் காதல்

கலப்பு இல்லாத தங்கம்
சொக்கத் தங்கம் இல்லை.
காமம் இல்லாத காதல்
சொர்க்கக் காதல் இல்லை.
ஆனால்
என்னவோ தெரியவில்லை
உன்மீதான என் காதலில்
மருந்துக்குக்கூட
காமக் கலப்பு இல்லை.
- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (16-May-17, 1:22 am)
பார்வை : 216

மேலே