பெண்களின் சுதந்திரம்
சுதந்திர நாடோ? - இது
சுதந்திர நாடோ?
காமுகர்களாய் பிறந்த கயவர்களே!
ஆறரிவு கொண்ட அரக்கர்களே!
பிணத்தையும் புணர்ந்த பிசாசுகளே!
மதுவால் மதியை இழப்பீரோ?
சபலத்தால் சாக்கடையில் வீழ்வீரோ?
எங்களது சகோதரிகள்,
என்ன பாவம் செய்தார்களடா? - மிருகங்களே!
இதுபோன்ற கொடுமைகளுக்கு,
தூக்கு தீர்வாகுமா?
சகோதரிகளின் மரணத்திற்கு,
இது நீதியாகுமா?
மதுவை ஒழித்தாலும்,
விழிப்புணர்வை விதைத்தாலும்,
அநியாயம் அழியுமா?
கொடூரங்கள் குறையுமா?- இல்லை!
ஆடையில் அபத்தம் என்காதே!
பேதைமேல் பழிசொல் வீசாதே!
மாற்றிகொள்! மாறிகொள்!
மனிதனாய் மாறிகொள்!
சுயஒழுக்கத்தையே மந்திரமாக்கி,
நாளெல்லாம் ஜெபித்து,
நாடெங்கும் பரப்பு!
பாரெல்லாம் சுதந்திரம் பிறக்கும்!
பாவைக்கும் சுதந்திரம் பிறக்கும்!
********
எனது குமுறலும் வேண்டுதலும்...