என்னைத் தேடுகிறேன்
உந்தன்
உதடுகளில் வழியும்
கொஞ்சு மொழியின்
பிஞ்சு விரல் கொண்டு
இசை மீட்ட
இடமொன்று கேட்டேன்...
பதிலுக்கு
நீயோ
மடியொன்று தந்தாய்..
ஆதலால்
நொடி தோறும்
மயங்குகிறேன்..!
இன்னும்
உடல் முழுதும்
நனைகிறேன்!
உனக்காகவே
என்னைத் தேடுகிறேன்!