வரம் தாய்

கனிவாய் கருவினில் எனை சுமந்தாய் !
பிறந்தபின் மடியினில் எனை சுமந்தாய் !
பசிக்கையில் மார்பில் எனை சுமந்தாய் !
கால் வலிக்கையில் தோளில் சுமந்தாய் !
உன்னை பிரிகையில் நினைவில் சுமந்தாய் !
இருக்கும்வரை எனை சுமந்து இறை(ரை)யானவளே !
எனக்கு இரவா வரமொன்று தா !
அடுத்த முறை உன்னை சுமக்க
உனது கால் செருப்பாகவாவது பிறக்க !

எழுதியவர் : பொன்முகுர் (15-May-17, 10:02 am)
சேர்த்தது : பொன்முகுர்
Tanglish : varam thaay
பார்வை : 63

மேலே