சுமைகளும் சுகங்களும்

ஆயிரம் சுமைகள் -
அடிநெஞ்சை அழுத்த !
அழுத்தமோ அதிகரிக்க -
ஆதரவுக்கும் ஆளில்லை !

மனைவியின் கண்களில் மகிழ்ச்சிவேண்டி ;
மனகஷ்டங்களை மறைக்கவே ;
மறைவான இடம் தேடி -
மனதுக்குள்ளே புழுங்குகிறேன் !

பசுமை மாறா பிஞ்சுக்குழந்தைகளின் -
பள்ளிக்கூட செலவுக்காக !
பட்டி தொட்டி பாராமல் -
பணத்துக்காக அலைகின்றேன் !

சுட்டெரிக்கும் வெயிலும் கூட -
சுணங்கவும் செய்யவில்லை !
கிடைக்கும் அந்த பணத்தை நினைக்க -
சுமைகள் கூட சுகம்தானே !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (16-May-17, 10:10 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 74

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே