கசம் குசும்

பாட்டிம்மா, அஞ்சு வருசம் கழிச்சு அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருக்கறோம். எனக்கு ரண்டு பெண் கொழந்தைங்க. அதுங்கள நீங்க ஆசீர்வதிக்கணும்.
■■■■■■■◆■■
வாடி எம் பேத்திச் செல்லம் செல்லம்மா. உங் கொழந்தைங்கள எம் மடில வையு. "எங் கொள்ளுப் பேத்திங்க ரண்டும் பதினாறும் பெத்து சிறப்பா வாழனும்". சரிடீ செல்லம்மா, உம் பொண்ணுங்களோட பேருங்களச் சொல்லுடி. எனக்கு பேருங்களாக்கான அர்த்தத்தையும் சொல்லுடி.
◆◆◆●●●●●●●●●
பாட்டிம்மா நம்ம பட்டிக்காட்டு குட்டி ஊருல இருக்கறவங்களே தமிழ்ப் பேருங்கள பிள்ளைங்களுக்கு வைக்கறதில்லை. எல்லாம் திரை ரசனைக்கு அடிமையாகி வேற மொழிப் பேருங்களத்தான் வைக்கிறாங்க. தமிழ்ப் பேருங்களக் கேவலமா நெனைக்கறாங்க. நம்ம குட்டி ஊர்ல நாலு பிரியா(Priya), அஞ்சு ஸ்வேதா. நானும் என் கணவரும் பெரிய படிப்பு படிச்சவங்க. மத்த படிச்சவங்க மாதிரி எங்களுக்கும் தமிழ்ப் பற்று கெடையாது. அதனால நாங்களும் அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்களாத்தான் எங்க பொண்ணுங்களுக்கு வச்சிருக்கறோம்
◆◆◆◆◆◆◆■■■
அப்பிடியா செல்லம்மா. சரிடீ. அந்தப் பேருங்களச் சொல்லுடி.
■◆◆◆◆◆◆◆◆◆■■
மூத்தவ பேரு கசம் (Kasam) இது ஒரு இந்தித் தொலைக்காட்சி தொடரோட பேரு. இளைய பொண்ணுப் பேரு குசும் (Kusum).
◆◆◆◆ ◆◆◆◆
என்னடி கசமு குசமுன்னு பேரு வச்சிருக்கற. சரி, சரி. நீங்க என்னடி செய்வீங்க. உலகம் அப்பிடி போயிட்டிருக்குது.
◆◆◆●●●●●●●●●●●■■■●●●●●●◆◆◆◆◆
கசம் = (swear)
குசும் (flower)
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க

எழுதியவர் : மலர் (16-May-17, 8:46 pm)
பார்வை : 227

சிறந்த நகைச்சுவைகள்

மேலே