அர்த்தமற்ற கனவுகள்
துயில் உறங்கும்
தும்பைப் பூ...
துணி விழகி
துவளும் போது...
துடிதுடிப்பதில்லை
துடுபிடித்த இதயம்..
துருவாய் உன்
துருவ முகம்..!
தனியா காதல்...
தவிக்கும் காமத்தால்...
தானே விம்பியெழும் மார்பில்...
தலைவைத்து
தகிக்கும் தணலை
தழுவ ஆசை..!
அதிகாலையில்
அசந்து தூங்கும்
அடியேனின்
அடிநெற்றியில்...
அந்தமுத்தம்...
அந்தமுத்தம்...
அப்பப்பா...ஆனந்தம்..!
அதற்காகவே
அனுதினமும்
அவசரப்படுவேன்...
அவதியும் படுவேன்...
அவள் வருகைக்காக...
அர்த்தமற்ற கனவுகள்..!
*****************
சிகுவரா
ஆகஸ்து 2005 ல் எழுதப்பட்டது.