உன்னோடு என்

உன் சிரிப்போடு என் சந்தோஷங்கள்

உன் கோபங்களோடு என் சேட்டைகள்

உன் வார்த்தையோடு என் மெளனங்கள்

உன் இமைகளோடு என் விழிகள்

உன் கனவுகளோடு என் நிஜங்கள்

உன் காதலோடு என் ஸ்பரிசங்கள்

உன் மீசையோடு என் இம்சைகள்

உன் தேடலோடே என் முடிவுகள்

எழுதியவர் : வான்மதிகோபால் (18-May-17, 10:40 am)
Tanglish : unnodu en
பார்வை : 430

மேலே