காதல்
உந்தன் இதயம் என்ன
இரும்பால் ஆனதோ பெண்ணே
நான் விடுக்கும் காதல்
மலர் அம்புகளெல்லாம்
உன் மனதை இன்னும்
தைக்கவில்லையே என் முயற்சி
வீண் போகிடுமோ தெரியவில்லையே
நீ ஒன்றும் இதயமில்லா ராட்சசி
என்று நான் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லையே
கனிவாய் வருவாய் உன்
இதயத்தில் எனக்கோர் இடம்
தந்திடுவாயா கன்னியே