இதயத்தை துளைக்களயடா

நீ சென்ற பாதையெல்லாம்,
என் பாதம் பதியுதடா;
என் விழியின் அம்பு யாவும்,
உன் இதயம் துளைக்களயடா,,
உன் நுனியுடன் என் நுனி தீண்டும் போது
உன் சுவாசத்தை களவு செய்ய வேண்டுமடா,
என் இதழுடன் உன் இதழ் சேர்க்கும் போது
என் சாயத்தை திருடிச் செல்ல வேண்டுமடா,
உன் அருகே நான் அமர,
உன் தோளில் என் கை பட,
வழிநெடுகிலும் யாவும் மறக்க,
பயணம் போக வேண்டுமடா,,,
என் அருகே நீ அமர,
என் மடியில் உன் தலை சாய,
விழி தூரங்களும் முடி மறைக்க,
ஆயணம் செய்து வர வேண்டுமடா...........