மனம் எனும் மாயப்பேய்
அடக்கி வைக்க நினைத்தாலும்
ஆவேசமாய் ஆடுது
அதட்டி விட நினைத்தாலும்
மிரட்டிவிட்டே அடங்குது
சாந்தமாய் இருக்கச் சொன்னால்
கோபமாக மாறுது
சத்தமின்றி பேசச் சொன்னால்
மேடைப்பேச்சாய் பேசுது
அடக்கியிதை ஆண்டவர் தான்
உலகினில் உண்டா
ஆண்டுவிட்டால் அவர் ஆண்டவரே
பதிலேதும் உண்டா
நிலைப்படுத்தக் கற்றவர் இங்குண்டா
தேடிப் பாருங்கள்
அவர் எங்கிருந்து சக்திபெற்றார்
கேட்டுக் கூறுங்கள்
நாம் கட்டுக்குள் வைத்திருந்தால்
செய்திடும் மாயை
அதன் சாட்டைக்கு தலைசாய்ந்தால்
அதுவொரு போதை