சொல்லும் பொருளும் 11 - பதடி, பகடி, கபடி
சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடும்; ஒரு சொல்லுக்கே பல பொருள் உண்டு. எனவே உதாரணத்திற்கு பதடி, பகடி, கபடி என்ற மூன்று சொற்களை இங்கு பார்ப்போம்.
பதடி
1. Chaff, blighted grain; பதர். (திவா)
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.
196 பயனில சொல்லாமை, திருக்குறள்
2. Husk; உமி. பகர்நிலாக் கற்றை பதடியா (பெருந்தொ. 1278)
3. Futility; பயனின்மை. பதடிவைகல் (குறுந். 323)
4. Bow; வில் (சங். அக)
பகடி 1
Mockery, ridicule; பரிகாசம்
Jest, witty repartee; விகடம்
Jester, buffoon; கோமாளி
Pretender, impostor; வெளி வேஷக்காரன் குருவேலைப் பகடைகளை மேவாதே (ஒழிவி, பொது, 3)
Pole dancer, dancer; கூத்தாடி, பகடிக்கோ பணம்பத்து (தண்டலை, 71)
A masquerade dance; வரிக்கூத்துவகை (சிலப், 3. உரை,)
பகடி 2
1. Primordial Matter; material cause of the world; பிரகிருதி தத்துவம். முத்திபொரு பகடிப்பகை துரந்த புனிதா (திருக்கலம். 13.)
2. Karma; வினை. பகடிப்பகைவா (திருநூற். 3).
கபடி
Deceitful person; கபடமுள்ளவ-ன்-ள். தீமைபுரி கபடி (திருப்பு. 109)