தொலை தூர பயணம்
வானம் எப்போதும்
தொட்டு விடும் தூரம் தான்
ஆனால்
அதை தொட நினைக்கும்
எல்லோருக்கும்
தொலை தூர பயணம்
மௌனம் வரைக்கும்
மனித பிறவி
அமைதி துறவி
மௌனம் கலைத்தால்
மனித பிறவி
காற்றாற்று அருவி
விடை கேட்டு கேட்கும்
கேள்விகள் எல்லாமே
சில நேரம் புதிராவும்
சில நேரம் புதையலாவும்
தொலைவில் அழகாக
தெரியும்
தோற்றம்
ஏனோ?
நெருங்கி சென்றால்
நெருடலாக தோன்றுகிறது