மனைவியின் போராட்டம்
மனைவியின் போராட்டம்...
கனிரசம் கனிந்திருப்பதாக
கருஞ்சிவப்பு உதட்டை
கனிவாக கையாளாமல்
கடித்துக் குதறிவிடுவான் – என்
காதல் கணவன்...
இறுக அணைத்து
இடுப்பு எலும்புகளை
இருக்குமிடம் தெரியாமல்
இருட்டிப்பு செய்திடுவான் – என்
இனிய கணவாளன்...
‘கன நிமிடங்களில்’
‘கடமை’ முடிந்ததென நினைத்து
கவிழ்ந்து படுத்துக்கொள்வான் – என்
கடமைத் தவறா கணவன்...
கண்களில் கண்ணீர்த்துளிகளுடன்
காலைச் சூரியனை
காணும்வரை – கிளர்ந்தெழும்பிய
காமத்தீயின் கலகத்தை
கட்டுக்குள் கொண்டுவர
கடவுளுடன் கலகம் செய்யத் துவங்கிடுவேன்
கண்களில் கண்ணீர்த்துளிகளுடன்
காலமெல்லாம்...
கட்டையில் போகும் காலம்வரை..
கடமையை மட்டும் செய்ய..
கருத்துச் சொல்லாத..
கருங்கல் மட்டுமே தேவை..
காமம் விளையாடும் நேரம் தவிர்த்து..
கடமை தவறாத என் கணவனுக்கு...
*****************
சிகுவரா
செப்டம்பர் 2004 ல் எழுதப்பட்டது.