துயில் கலைத்துவிடு கண்ணா

உன் கண்களில் களவு போக
அலங்கரித்து ஆவலோடு
அதிகாலை
உன் மென் வருடலில்
வலுவிழக்க புன்னகையோடு
பூவிதழ்கள்
நின் புன்முறுவலில்
போதை கொள்ள
வெண்ணிலா
மோட்சம் பெரும்
சூட்சமம் உன்னிலிருக்க
துயில் கலைக்க தயக்கம் ஏனோ?
உன் வருகையில்லா நாளில்
தற்கொலை செய்யுமே..!
விருப்பம் தானோ?