நிலா ஒரு கவிதை

வானம் என்ற கவிதை எழுத
வார்த்தைகள் தேடினேன்
நிலவு ஒன்று போதும்
நீ எழுததத் தேவை இல்லை என்றது
வானம் !
தேய்ந்து தேய்ந்து ஒரு நாள்
இல்லாமல் போகுமே என்றேன் !
மலர்ந்து வந்து மறுபடியும் சிரிக்கும்
உனக்கேன் வீண் வேலை என்றது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-May-17, 9:06 am)
Tanglish : nila oru kavithai
பார்வை : 340

மேலே