அரண்மனை
ராஜாக்கள் ஆண்ட இடம்
வீரர்கள் மாண்ட இடம்
ராணிக்கள் சிரித்த இடம்
ஏழ்மை மரித்த இடம்
தங்கம் ஜொலித்த இடம்
கவிதைகள் பிறந்த இடம்
எதிரி என்று தெரிந்தபின்னும்
மரியாதையாய் நடத்திய இடம்
வீரனுக்கு மதிப்புக் கொடுக்கும்
ஒற்றனுக்கு சிறையைக் கொடுக்கும்
புலவனுக்கு பரிசில் கொடுக்கும்
மக்களுக்கு தீர்வைக் கொடுக்கும்
பல சட்டத்திட்டங்கள் தீட்டப்படும்
எதிராளி கனவுகள் கலைக்கப்படும்
என்றும் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது
ராஜா சிறப்பென்றால் பஞ்சமேயிருக்காது
ராஜமாதாவும் உண்டு ராணியுமுண்டு
மந்திரியும் உண்டு தளபதியுமுண்டு
சீரான அழகான அறைகளுண்டு
சிரித்தபடி தோகைவீசும் கன்னியருண்டு
மாடத்தில் புறாவும் உண்டு
பொங்கி மணக்கும்பல பூக்களுண்டு
பார்த்து ரசித்திட அழகானசிலையே
அரண்மனை சான்றுரைக்குக்கும் சிறந்ததெங்கள் கலையே