ஆடம்பரம்

ஆடம்பரம் வேண்டும் ஈகை குணத்திற்கு
ஆடம்பரம் வேண்டும் நல்ல மனதிற்கு
நல்லது நினைப்போராய் ஞானிலம் வேண்டும்
மனிதம் நிலைத்திருக்க நற்குணமே தூண்டும்
செல்வம் பெருகட்டும் செழிப்பாய் வாழ்ந்திரு
அதை தினம் நிரூபிக்க யாரோ வேண்டியது?
முடிந்தால் உதவிவிடு இல்லையென்றால் ஒதுங்கிவிடு
உன்வீட்டு ஆடம்பரம் யாருக்கிங்கே சோறுயிடும்
மனமோ ஒருகாடாய் வெளித்தோற்றம் சொர்க்கபுரியாய்
இருந்தென்ன லாபம் பிறந்தென்ன பயனோ?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-May-17, 7:40 pm)
Tanglish : aadambaram
பார்வை : 280

மேலே