எது உண்மை

ஹாலோ டாக்டர் !
ஹாலோ ஆரோக்கியம் வாங்க!
எப்படி இருக்கீங்க !
ஏன் சார் மூனு வேலைக்கும் மாத்திரை தான் .பி.பி செக் பன்ன வந்தன் சார்!
டோன்ட் ஒரி நாற்பது வயதுக்கு மேல எல்லாருக்கும் வர கம்ளெய்ன்ட்தான் .பீளீஸ் கொஞ்சம் முச்ச இழுத்து விடுங்க!
ம்ம்ம்..ஸ்ஸ்ஸ்...
ஒகே..
நார்மலாத்தான் இருக்கு வழக்கமா எடுத்துகிற மாத்திரையை சாப்பிடுங்க ஆரோக்கியம்!
சார் அந்த பேர கூப்பிடாதிங்க !
ஆரோக்கியம்!என்ன ஆச்சு!
ஒன்னுமில்ல சார் !
ஆரோக்கியத்துக்கு பெயர் பிடிக்காமல் பெயரை மாத்த வக்கீலிடம் செல்ல .கொஞ்சம் யோசித்து பாருங்க.பேரைமாத்திட்டா மட்டும் எல்லாம் நல்லா நடந்திடுமா என வக்கீல் கேட்டார்.
இல்ல சார்! ஒ கே பீஸ் ,பேப்பர் என 5000 ஆகும்.
வரவர வக்கீல் பீஸ்ஸும் டாக்கட்டர் பீஸ்ஸீம் அதீமாகி போச்சு என என முனு முனுத்துகொண்டே வந்தார்.
தீடிரென்று மயங்கி கீழே விழுந்தார்!
அங்கிருந்த சில பேர் ஆரோக்கியத்தை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மயக்கம் தெளிந்த ஆரோக்கியம்..
டாக்டர் எனக்கு என்ன ஆச்சு !
அதுவந்து சுகர் லெவல் கொஞ்சம் அதிகமாகி போச்சு,இன்னிக்கு இன்சுலின் எடுத்தீங்ளா!
12 யூனிட் எடுத்தன் டாக்டர்.
மருந்து எங்க வாங்கறீங் !
கவர்மன்ட் ஹாஸ்பிட்டலதான் டாக்டர்!
அப்படியா !சரி ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல!
ஏன் சார் சொல்லுங்க!
"என்னத்த சொல்றது கான்டரக்ட் என்றபேரில பில்லர் மற்றும் தரம் இல்லாத மாத்திரைங்க"..
இதை பத்தி நான் வாயதெறந்த வேலை போயிடும்!
சரிங்க ஆரோக்கியம் உடம்ப பாத்துகோங்க!
ஆரோக்கியம் கொஞ்சம் எழுந்து வீட்டு வந்த உடனே லேசாக மூச்சு தினற இன்ஹோலர் எடுத்து ஒரு பப்
ஸ்ஸ் ன உறிஞ்சார்..
ஒரளவு நார்மலுக்கு வர டாக்டருடன் அவர் பேசிய மருத்துவ சம்பாஷனை
நினைவுக்கு வந்தது.உடனே பில்லர் என்றால் என்ன.மெடிசன் சப்ளையர் கொட்டேஷன், அதை செய்யக்கூடிய நிறுவனம் என்ன என தனது கம்பியூட்ரில் தேடி பார்ததார்.
அந்த ரிபோர்ட் அதிர்ச்சியை தர தன் மருந்துகள் அனைத்தையும் அதி நவீன லேபோரட்ரிக்கு அனுப்பினார்..
இரண்டு நாளில் ரிப்போர்ட வந்தது.
அதை எடுத்து கொண்டு தன் மருத்துவரை சந்தித்தார்.
வாங்க ஆரோக்கியம் என்ன இது?
இந்த ரிபோர்ட்ட கொஞ்சம் பாருங்க.
வாங்கி பார்த்த டாக்டர் அதிர்ந்தார்!
25% மெடிசனில் கன்டன்ட் மத்ததெல்லாம் வேஸ்ட்!
மருத்துவம் எல்லாருக்மே ஒரே மாதிரியாக வேண்டும்.சில கண்ட்ரியில மருத்துவம் முழுவதும் இலவசம்.ஒரே தரம் ,இது இந்தியாவிலும் வர வேண்டும்.
அப்படியா சார்!
ஆமாம் ஆரோ !
சார் இந்த பெயரையே கூப்பிடுங்க!
எல்லாத்துக்கும் விவாத மேடை வேண்டாம் என நினைக்கிறேன் ஆரோ!
ஆமாம் சார் போற போக்க பார்த்த டென்டர் எனகிற பெயர்ல"மருந்தும் ரேஷன் பொருளா போயிடும் பலக்கிது சார்"!
அப்சலியூட் ஆரோ எதிர்காலத்தில அரசியல் வாதிங்க பணம் பன்ன இதையும் செய்வாங்க.
செய்யலாம் அவங்கள எப்போதும் கட்டுக்குள்ள கொண்டு வர முடியாது ஆரோ ஆனா அனைருக்கும் தரமான
மருந்துகளை வழங்க முடியும்!
போன வாரம் செய்தி தாள்ள பாத்திங்கனா ,எக்ஸ்பிரியான மருந்த வேற பாட்டிலை மாத்தி கொஞ்சம் அக்டிவ் இன்கிரிடியன்ட் சேர்தது பல கோடிக்கு வித்துடாங்கா.சில பேருக்கு அலர்ஜியாக விசாரனையில் அந்த கும்பல் பிடிபட்டது!
அப்படியா டாக்கடர்!
சரிங்க ஆரோ இந்த ரிபோர்ட்ட வச்சிகாங்க நான் ரவுன்ட்ஸ் போகனும்..
பாய் ஆரோ என டாக்டர் கிளம்பினார்..
சரிங்க டாக்டர்..
வீட்டுக்கு வந்தார் ஆரோ.
"உடனே இதை சி.பி.ஐ க்கு ஒரு பிரதியை அனுப்பிவிட்டாா்"..
ஆழ்ந்த யோசனை இது போன்ற மருந்துகள் எந்த பிரச்சனையும் கன்டோரல் பன்னாது,ஆனா ஒருபக்கம எல்லாருக்கும் கமிஷன் போயிட்டு வாய தெறக்கல.எதிர்காலத்தில இந்த பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என முனு முனுத்தார்.
ஏங்க உங்களுக்கு இந்த வேலை என அவர் மனைவி கேட்க.
எதிர்கால தலை முறை "ஆரோக்கியமாக" இருக்கனும்டி.நான் இந்த பேர வெச்சிகினு இதை கூட செய்யலனா எப்படி டீ என்றார்.
ஆரோ.காம் என்ற இணைய தளத்தை ஆரம்பித்து மருத்துவ உண்மைகளை தன் மருத்துவரின் உதவியுடன் எழுத ஆரம்பித்து எதிர்கால தலைமுறைக்கு மருந்துகள் பற்றிய அறிவை முன்வைக்க எழுதினார் அதில் சி.பி.ஐ க்கு ரிப்போர்ட் அனுப்பி இன்று வரை பதில் கிடைக்காதது வரை எழுதினார் ...
அவர் மனதில் புது ஹீரோ வருவான் என ஆரோவே ஹீரோவாகி தன் இணையதளத்தை பார்த்து பழிவாங்குவது போல கற்பனை கனவில் தூங்கிவிட்டார்..
என்னங்க எழுந்திருங்க எழுந்திருங்க!
என்றாள் கையில் காபியுடன் ஆரோவின் மனைவி..