உன் பெயரை மட்டுமே…
பெண்ணே..!
திருடுவதை விட்டுவிடு
களைப்பாக இருக்கிறது...
உன்னால் திருடப்பட்ட
இதயங்களுக்கிடையே
என் இதயத்தையும் தேடுவது...
ஏனென்றால்...?
உன்னால் திருடப்பட்டு..
மலையாக குவிக்கப்பட்டுள்ள
இதயங்களெல்லாம்..
உன் பெயரை மட்டுமே உச்சரிக்கின்றன...
*****************
சிகுவார
மே 2004