ஒரு சீவனுக்கு காயம் மற்றோர் சீவனுக்கு மருந்து
சாலையில் ஒரு சீவன்
காயமுற்றால்
ஓடிச்சென்று மருந்திடுகிறாய்
உன்னால் காயமுற்ற ஒரு சீவன்
துடிக்கிறேன் மருந்திட மனமில்லையோ??
என்ன ஆச்சர்யம்!!!
உனக்கு காயப்படுத்தத்தான் தெரியுமென இருந்தேன்
மருந்துமிடுகிறாயே!!!