மின்னுவது பெண்

பாட்டி பேரக்குழந்தையின் விரலை பிடிக்கும் போது
எவ்வளவு கவனம்,

சிரிப்பை மட்டுமே மொழியாக கொண்டு
காட்டப்படும் சமிஜ்ஜைகள் புரிந்துகொள்ளப்படுகின்றன,

அடித்தும், கத்தியும், அழுத்தும் விடை கேட்கும் குழந்தையை,
விடாமல் இருகைகளையும் பிடித்துக்கொண்டு
பழைய நிலாவையும், தெரு நாயையும் காட்டுகிறாள்,

பல நாள் கழித்து நிலவை ரசிக்கிறாள்,

முகச்சுருக்கம் இருந்தும், நெற்றி சுருக்கம் இல்லை.

நிலவின் முகத்தை அருகில் காண்கிறாள்.

தொலைந்த பல பொருட்களின் சங்கமமாக அங்கங்களை
பார்த்து பார்த்து ரசித்து பூரிப்படைகிறாள்.

உள்ளே வரத்துடிக்கும் பாட்டி,
வெளியே வர அடம் பிடிக்கும் பேரன்

ஒற்றை கையை பிடித்துக்கொண்டு விட மறுக்கும் - அப்பா
சொன்னார் " வெளியே போகக்கூடாது " என்று

அழுதது, அப்பாவை வெளியேற்ற முடியாமல்!
நடந்ததை புரிந்து கொண்டது போல் மின்னின - மூதாட்டியின் கண்கள்.

எழுதியவர் : பூபாலன் (23-May-17, 7:39 pm)
சேர்த்தது : பூபாலன்
பார்வை : 88

மேலே