இயற்கையின் மன்னிப்பு

விடுமுறையின் வெறுமை தவிர்க்க எண்ணி,
சென்றேன் மலையில் ஒரு பயணம்....

அங்கு...
வானென உயர்ந்த தேவதை தன் அகண்ட கைகளால் வாரி அணைத்தாள் என்னை..!!

வலிந்து நுழைந்த வெயிலைத் தடுக்க சாளரம் அமைத்தன மரங்கள்..!!
வசீகரித்து வீசிய காற்றில் ஆடி ஆடிச்
சிரித்தன இலைகள்..!!
வளைந்து நெளிந்த சாலையில் கெஞ்சிக் கொஞ்சிக் கொண்டன குரங்குகள்..!!
வளர்ந்த மரங்களின் உரசலில் கசிந்த காதலை பாடின குயில்கள்..!!

வஞ்சிக்க மனமின்றி அன்பு பொழிந்தாள் இயற்கை
ரசிக்க மனமின்றி எனக்குள் ஏனோ ஒரு நெருடல்...

கேட்க எண்ணினேன்.....

இயற்கையே இன்னும் எத்தனை முறைதான் எங்களை மன்னிப்பாய் ?

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (23-May-17, 10:10 pm)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
Tanglish : iyarkaiyin mannippu
பார்வை : 64

மேலே