இயல் குட்டி✍
இயல் குட்டி...
பொம்மையை வைத்துக்கொண்டு
விளையாடுபவள்
மார்போடு பொம்மையை சாய்த்தப்படி
தூங்கி போவாள் இயல்
தூக்கத்தில் அவளிடமிருந்து
பொம்மையை வாங்குவது என்பது
அவ்வளவு இலகுவாக இருப்பதில்லை
தாயிடமிருந்து மழலையை பிரிப்பது போல தான்
என் போராட்டமிருக்கும் அப்போதெல்லாம்....✍