என்னவள் தமிழ்
காலத்தின் தனிமையில் தவித்திருந்தேன்,
காதல் கதை பேச வந்தாள் என்னவள் தமிழ்..!!
கசிந்து உருகும் அன்புடன் அவள்
கவியுரைக்க மாட்டாயா? என்றாள்
கற்பனை அலை மோதும் கடலே!
கவியால் நல்லிசை பாடும் குழலே!
கடிமணம் பரப்பும் மலரே!
காற்றின் தென்றலாய் நயம் பாடும் மொழியே!
கவி மறந்து விட்டேன் உன் அழகால்! என்றேன்
கண் அசைத்து சிரித்தாள்...
காணும் போதெல்லாம் மென்மை மட்டும் பேசும் காரணம் ஏனோ? என்றாள்
காதலின் மொழி மென்மை தானே...
கடிந்து உரைக்கவும் ஆசை தான் ஆனால்,
தவறு செய்ய மறுக்கிறாயே நீ! என்றேன்
கவிதை கதிராய் ஒளிர்ந்து விட்டு என்
கன்னத்தில் முத்தம் இட்டுச் சென்றாள்
என்னவள் தமிழ்..!!